கோரக்பூர் மருத்துவமனையில் 42 குழந்தைகள் உயிரிழப்பு - தொடரும் அதிர்ச்சி சம்பவம்

புதன், 30 ஆகஸ்ட் 2017 (11:06 IST)
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 42 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சில நாட்களுக்கு முன்பு, கோரக்பூரில் உள்ல பி.ஆர்.டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
அதேபோல், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் உள்ள ஸ்ரீ நரசிம்ம ராஜா மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி தற்போது வரை 35 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளது. குறைந்த எடையுடன் பிறந்தததுதான் இறப்பிற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், கோரக்பூர் பி.ஆர்.டி அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் 42 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஏற்கனவே, குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராஜீவ் மிஸ்ரா  மற்றும் அவரின் மனைவி பூர்ணிமா சுக்லா ஆகியோர் நேற்று கைது செய்யபப்ட்டனர். இந்நிலையில்தான் தற்போது 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
 
மூளை வீக்கம் மற்றும் வேறு சில காரணங்களினால் அந்த குழந்தைகள் உயிரிழந்தனர் என பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.கே.சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்