தடுப்பூசியால் 2 பேர் பலி

சனி, 28 ஆகஸ்ட் 2021 (17:19 IST)
ஜப்பான் நாட்டில் மாடர்னா  தடுப்பூசி 2 ஆம் தவணையை செலுத்திக் கொண்ட 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. இந்தச் சம்பவம் அங்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளுக்குப் பரவியது.

கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து விழிப்புணர்வூட்டி வருகிறது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் மாடர்னா  தடுப்பூசி 2 ஆம் தவணையை செலுத்திக் கொண்ட 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. இந்தச் சம்பவம் அங்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டில் உள்ள சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடைபெற்றது. அப்போது,தடுப்பூசியில் உலோகத்துகள்கள் இருந்தது தெரியவந்துள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்