காதலியை உயிருடன் புதைத்த விவகாரம்- நீதிமன்ற விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

வெள்ளி, 7 ஜூலை 2023 (17:15 IST)
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஜாஸ்மின் கவுர் கொலை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியா நாட்டின் அடிலெய்டு நகரில்  இந்திய மாணவி ஜாஸ்மின் கவுர் (21) நர்சிங் மாணவி படித்து வந்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு அவரும்  தாரிக்ஜோத்தும் என்ற நபரை காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த நிலையில், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது ஜாஸ்மீன் கவுர் காதலனுடன் பேசுவதைத் தவிர்த்துள்ளார்.

தன்னுடம் பேசும்படி தாரிக்ஜோத் அவருக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் ஜாஸ்மீன் அவருடன் பேச மறுத்துவிட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த  தாரிக்ஜோத்,  ஜாஸ்மீனை கொல்ல திட்டமிட்டார். அதன்படி, அடிலெய்டில் பயிற்சி செவிலியராக வேலை செய்து வந்த அவரைத் தன் நண்பரில் காரில் 650 கிமீ தூரத்திற்கு அழைத்துச் சென்று  சென்றுள்ளர்.

அதன்பின்னர், பிளிண்டர்ச் மலைப்பகுதிக்கு ஜாஸ்மீனை அழைத்துச் சென்று அவரது கழுத்தை அறுத்து, கண்களை கட்டி ஒரு கல்லறையில் அவரை உயிருடன் புதைத்துள்ளார்.

இந்தக் கொலைக்குற்றத்தை தாரிக்ஜோத் ஒப்புக் கொண்டிருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதிக் கட்ட விசாரணையின்போதுதான் இத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே இக்கொடூர கொலைக் குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்