டிரம்ப் ஆதரவு தொப்பி அணிந்தவருக்கு உணவில்லை" என்று அறிவித்த முதலாளி

சனி, 2 பிப்ரவரி 2019 (18:26 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக "அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்" என்ற வாசகத்துடன், பேஸ்பால் விளையாட்டு தொப்பி அணிந்துள்ள யாருக்கும் உணவு பரிமாற வேண்டாம் என்று அறிவித்த கலிபோர்னிய ஹோட்டல் முதலாளி ஒருவர், தனது முடிவை மாற்றியுள்ளார்.
சுவஸ்த்திகா அல்லது இனவெறி கொள்கையுடைய 'கு குலக்ஸ் கிளான்' குழுவை போல, கோபம், வெறுப்பு மற்றும் வன்முறையின் அடையாளங்களாகவும் இந்த தொப்பிகள் மாறியுள்ளதாக ஹோட்டல் முதலாளி கென்ஜி லோபஸ்-அல்ட் முன்னதாக தெரிவித்தார்.
 
சமீபத்திய வன்முறையான, இனவெறி தாக்குதல்களை நடத்தியோர் இத்தகைய தொப்பியை அணிந்து கொண்டு, இந்த வசனத்தை முழங்கினர் என்று இந்த தொப்பிக்கு எதிரானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
தனது முடிவு சிலரை கோபப்படுத்தியுள்ளதாகவும், பிறரை புண்படுத்தியுள்ளதாகவும் இப்போது லோபஸ்-அல்ட் குறிப்பிடுகிறார்.
 
எனவே, தங்களின் வெறுப்புகளை வாசலுக்கு வெளியே விட்டுவிட்டு வருகின்ற அனைவரையும் சன் பிரான்சிஸ்கோவுக்கு அருகிலுள்ள தனது ஹோட்டல் வரவேற்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்