காலம் காலமாக விடை தெரியாமல் இருந்து வரும் புதிர் கேள்விகளில் ஒன்று முதலில் கோழி வந்ததா? இல்லை முட்டை வந்ததா? என்பதுதான்.
முட்டைதான் முதலில் வந்தது என்றால் அதை எந்த கோழியும் போடாமல் எப்படி வந்திருக்கும் என்றும், கோழிதான் முதலில் வந்தது என்றால் எந்த முட்டையும் இல்லாமல் கோழி எப்படி வந்திருக்கும் என்றும் மடக்கி கேள்வி கேட்டு விளையாடுவது ஒரு வேடிக்கையாகவே இருந்து வந்திருக்கிறது.
இந்நிலையில்தான் இந்த கோழி, முட்டை மேட்டரை சீரியஸாக எடுத்துக் கொண்ட அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழு இதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்து உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிலாந்தி ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கோழியின் முட்டை ஓடு உருவாக OvoCleidin 17 OC 17 என்ற புரதம் முக்கியத் தேவையாக உள்ளது. இந்த புரதம் கோழியின் கருப்பையில் மட்டுமே உள்ளது. அதனால் ஒரு முட்டை உருவாக அது ஒரு கோழியின் கருப்பைக்குள் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது நிரூபணமாகியுள்ளதால், முதலில் வந்தது கோழிதான் என்ற முடிவிற்கு வந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
Edit by Prasanth.K