அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு உலகம் முழுவதும் பெரும் பயங்கரவாத இயக்கமாக அறியப்பட்டது அல்கொய்தா தீவிரவாத இயக்கம். அதன் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டிருந்தாலும், இயக்கத்தை வேறு சிலர் வழிநடத்தி வருகின்றனர். அல்கொய்தா அமைப்பின் வட ஆப்பிரிக்க பகுதிகளின் தலைவராக இருந்து வருபவர் அப்தல்மாலிக் டூருக்டெல்.
சமீபத்தில் ஆப்பிரிக்க நாடான மாலியில் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரை உயிரோடு பிடித்ததாக பிரான்ஸ் தெரிவித்திருந்தது, இந்நிலையில் மீண்டும் மாலியில் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் தலைவர் அப்தல்மாலிக் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது, இந்த தாக்குதல்கள் தீவிரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.