காரில் தொழில்நுட்ப கோளாறு..? 1.70 லட்சம் கார்களை திரும்ப பெறும் ஹூண்டாய், கியா நிறுவனங்கள்!

Prasanth Karthick

திங்கள், 18 மார்ச் 2024 (10:53 IST)
உலகம் முழுவதும் பல வகை மாடல் கார்களை விற்பனை செய்து வரும் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் 1.70 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளன.



உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களும் முக்கியமானவை. உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் கொரியாவில் Ioniq 6, Ioniq 6, Genesis GV60, GV70, GV 80 Evs என்ற மாடல்களில் பல எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் அந்த கார்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ளதாக புகார்கள் எழுந்தது. அதுகுறித்து ஆய்வு செய்ததில் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள சார்ஜிங் செய்யும் மென்பொருட்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

அதனால் ஹூண்டாய் நிறுவனம் கொரியாவில் விற்பனை செய்த மேற்குறிப்பிட்ட ரக கார்கள் சுமார் 1,13,000 கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அதுபோல கியா கார் தயாரிப்பு நிறுவனமும் தனது மின்சார வாகனமான Kia’s EV6ல் உள்ள கோளாறு காரணமாக 56 ஆயிரம் வாகனங்களை கொரியாவில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைபாடுகள் காரணமாக லட்சக்கணக்கில் திரும்ப பெறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்