இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி ரேச்சல் கனடாவில் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். குத்தப்பட்ட இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் அவர் மயங்கிய இடத்தில் கிடந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த ரேச்சலுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மர்மநபரை போலிஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ரேச்சலின் தந்தை ‘ எனது மகளை சமூக வலைதளத்தில் ஒருவர் பின் தொடர்ந்ததாக என் மகள் என்னிடம் சொல்லியுள்ளார். எனது மகள் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அங்குள்ள ஊடகங்களில் அப்படி எதுவும் செய்தி வெளிவரவில்லை. எனவே எங்களுக்கே குழப்பமாக உள்ளது. விசா கிடைத்தவுடன் கனடா செல்ல இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.