தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிந்து கவுன்சிலர்கள் தேர்வான நிலையில் இன்று தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. பல இடங்களில் கட்சியினரிடையே மோதல், கவுன்சிலர்கள் மிரட்டல் என பல சம்பவங்கள் நடந்தாலும் மறைமுக தேர்தல் கிட்டத்தட்ட பல பகுதிகளில் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த பொன்தோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொன்தோஸ் நீலகிரி பகுதியில் வசிக்கும் தோடர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். தமிழக அரசியலில் தோடர் பழங்குடி நபர் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது உதுவே முதன்முறை என கூறப்படுகிறது. அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.