துபாய் கனமழை "மேக விதைப்பு" காரணமா? தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

Mahendran

வியாழன், 18 ஏப்ரல் 2024 (14:34 IST)
துபாயில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில் இந்த மழைக்கு மேக விதைப்பு காரணமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு துபாயில் கனமழை பெய்தது என்பதும் இதன் காரணமாக துபாயில் உள்ள பல சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.

குறிப்பாக துபாய் விமான நிலையத்தில் வெள்ள நீர் தேங்கி இருந்ததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதும் ஏராளமான விமானங்கள் தாமதமாக கிளம்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சென்னையில் இருந்து  துபாய் செல்லும் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துபாய் கனமழைக்கு மேக விதைப்பு காரணம் என்ற தகவல் நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். துபாய் மழைக்கும் மேக விதைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மேக விதைப்பு செய்யப்படுவதற்கு முன்பே தீவிர மழை பெய்யும் என்றும் சர்வதேச வானிலை அமைப்புகள் எச்சரித்து இருந்தன என்றும் தெரிவித்துள்ளார்

மேக விதைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மழையை பெய்ய மேகங்கள் செயற்கையாக மாற்றி அமைக்கப்படும் என்றும் இதற்கு விமானத்தின் மூலம் சில்வர் அயோடைடு என்ற துகள் மேகங்களில் தூவப்படும் என்றும் ஆனால் துபாய் மழைக்கும் மேகவிதைப்புக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்