பெண்களுக்கு எதுக்கு தனி அமைச்சகம்! – இழுத்து மூடிய தாலிபான்கள்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (10:26 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் பெண்களுக்கான அமைச்சகத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஆப்கானிஸ்தானில் பல புதிய சட்டத்திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரவையில் பெண்களுக்கும் இடம் அளிக்க வேண்டும் என பெண்ணிய அமைப்புகள் சில போராடிய நிலையில், பெண்களுக்கு அமைச்சரவையில் எந்த பணியும் இல்லை என தாலிபான்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது பெண்கள் நல அமைச்சகத்தை மூடுவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். அதற்கு பதிலாக அறநெறி பெயரில் புதிய துறை உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதற்கு பென்ணிய அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்