தப்பு செஞ்சா கை, கால்கள் கட் - தண்டனைகளை அறிவித்த தாலிபன்கள்

சனி, 25 செப்டம்பர் 2021 (14:03 IST)
பொதுமக்கள் தவறு செய்தால் கை, கால்களை வெட்டும் தண்டனை,  மரண தண்டனை  வழங்கப்படும் என தலிபான் அறிவிப்பு. 

 
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில் அந்நாட்டு சட்டத்திட்டங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். முக்கியமாக பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் குற்றங்கள் செய்தால் மரண தண்டனைகள், கை - கால்கள் வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுப்புகளை துண்டிக்கும் தண்டனை மிகவும் அத்தியாவசியமானது என குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும், 1990 ஆம் ஆண்டுகளில் இந்த தண்டனைகள் பொது இடங்களில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இம்முறை பொதுமக்கள் முன்னிலையில் இல்லாமல் தனி இடங்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படலாம் என தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்