தலீபான்களால் பெண்கள் பாதிப்பு...

திங்கள், 20 செப்டம்பர் 2021 (18:40 IST)
கடந்த வருடம் அமெரிக்க தேசத்தின் புதிய அதிபராக ஜோ பிடன் பதவியேற்றார். அவரது தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆப்கானைவிட்டு அமெரிக்க படைகள் சமீபத்தில் வெளியேறியது.

இந்நிலையில், பழமை விரும்பிகளாக தலீபான்களால் அந்நாட்டிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமென ஐநா கவலை தெரிவித்தது. அந்நாட்டிலிருந்து பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மாநகராட்சிப் பெண் ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பள்ளிகளுக்கு ஆண்கள் வந்தால் போதுமென ஏற்கனவே தலீபான்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்