பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற கூடாது: தாலிபான்கள் உத்தரவு!

வியாழன், 12 ஜனவரி 2023 (15:44 IST)
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக் கூடாது என தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே பெண்களுக்கு பல உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. 
 
பெண்கள் அரசு அலுவலர்களில் வேலை செய்யக்கூடாது, பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது, பெண்கள் கல்லூரியில் படிக்க கூடாது போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 
 
அந்த வகையில் தற்போது பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக் கூடாது என தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பெண் மருத்துவர்கள் மட்டுமே அணுக வேண்டும் என்றும் இதனை கண்காணிக்க காவல்துறையினர் ஈடுபட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் உள்ள பெண்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்