பிளாஸ்டிக்கை உண்ணும் சூப்பர் புழுக்கள்! – பிளாஸ்டிக் மாசுபாடு குறையுமா?

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (12:22 IST)
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கை உண்ணும் புழுக்களை கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும், அதனால் ஏற்படும் மாசுபாடும் அதிகமாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் புதைவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பதால் கடல் மாசுபடுவதுடன், கடல் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

பிளாடிக்கை மறுசுழற்சி செய்ய அல்லது பாதுகாப்பான வழிமுறையில் அழிக்க பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் சொபாபஸ் மொரியா (Ziphobas Morio) என்ற சூப்பர் வோர்ம் பிளாஸ்டிக்கை தின்று செரிப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த புழுக்கள் குறித்து மேலும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூப்பர் வோர்ம் ஆராய்ச்சி பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்