ஆசிரியை ஒருவர் பிரான்ஸ் நாட்டில் மாணவ, மாணவிகளுடன் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லைஸீ ஃப்ரெட்ரிக் மிஸ்ட்ரல் என்ற பள்ளி தெற்கு பிரான்ஸில் உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் மாணவர்கள் பள்ளி இறுதி நாளை ஆசிரியர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் வித்தியாசமாக மறக்கமுடியாத அளவுக்கு கொண்டாட திட்டமிட்டனர் அவர்கள்.
இந்த கொண்டாட்டத்தின் போது மாணவ மாணவிகள் ஆசிரியர் ஒருவருடன் நிர்வாணமாக ஆடைகளை களைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். ஆனால் தங்கள் அந்தரங்க உறுப்புகளை கருப்பு அட்டையால் மறைத்து புகைப்படம் எடுத்தனர்.
ஆசிரியையுடன் சேர்ந்து மாணவ மாணவிகள் நிர்வாண புகைப்படம் எடுத்தது பிரான்ஸில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. சம்மந்தப்பட்ட பள்ளி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.