ஆசிரியர் முகத்தில் எச்சிலை துப்பிய மாணவர் (வீடியோ)

திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (17:01 IST)
ஜோர்டானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டமளிப்பு விழாவில் பட்டம் வாங்கும் முன்பு மாணவர் ஒருவர் மேடையில் இருந்த தனது ஆசிரியரின் முகத்தில் எச்சிலை துப்பியுள்ளார். 
 
மாணவ, மாணவியர் வரிசையில் வந்து பட்டம் பெறும்போழுது வரிசையில் வந்த மாணவர் ஒருவர் மேடையில் அமர்ந்திருந்த தனது ஆசிரியரின் முகத்தில் எச்சிலை துப்பிவிட்டு சென்றார்.
 
இந்நிலையில், அந்த மாணவரின் இளங்கலை பட்டத்தை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து உயர் கல்வித் துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.
 
தற்போது இந்த வீடியோ இனையத்தில் தீயாக பரவி வருகின்றது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்