இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில் போரை நிறுத்த கோரி இஸ்ரேல் மக்களே போராட்டத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இடையே போர் மூண்ட நிலையில், ஹமாஸின் பதுங்கு தளங்கள் அமைந்துள்ள காசாவை இஸ்ரேல் தாக்கியது. ஆனால் ஹமாஸ் படையினரை விடவும் அதில் பொதுமக்களே அதிகம் கொல்லப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து காசாவை நிர்மூலமாக்கி வருகிறது இஸ்ரேல். தற்போது பாலஸ்தீன மக்களின் பலி எண்ணிக்கை 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் காசாவிற்கான நிவாரண பொருட்கள் சப்ளையிலும் இஸ்ரேல் குறுக்கிடுவதால் மக்கள் பட்டினியில் செத்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க இந்த போரை காரணம் காட்டி அருகில் உள்ள பிற நாடுகளுடனும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பிரச்சினை செய்து வருகிறார். ஆனால் அவர் இஸ்ரேல் மக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தவில்லை என்று மக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது. அதன் வெளிப்பாடாக நேற்று இஸ்ரேல் மக்களே டெல் அவிவ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பெஞ்சமின் நேதன்யாகு, ட்ரம்ப்புக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்திய அவர்கள், போரை நிறுத்த வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் இஸ்ரேலில் பரபரப்பு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K