இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே நீண்ட காலமாக போர் நடந்து வரும் நிலையில் போரை நிறுத்த இஸ்ரேல் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் தலையீட்டால் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. கைதிகள், பணைய கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் காசாவை முழுவதும் அமெரிக்க ராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்து புணரமைப்பு செய்யும் என கூறப்பட்டது.
ஆனால் இதற்கு ஹமாஸ் உடன்படாத நிலையில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியது. 2023 முதலாக நடந்து வரும் போரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரை முற்றிலுமாக நிறுத்த இஸ்ரேல் 3 நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதன்படி, ஹமாஸ் எந்த நிபந்தனையும் இன்றி மீதமுள்ள அனைத்து பிணைய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். காசாவிலிருந்து மொத்த ஹமாஸ் கும்பலும் நாடுக்கடப்பட வேண்டும். காசாவை ஆயுதமில்லா பகுதியாக மாற்ற வேண்டும். ஆயுதங்கள் தடை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளது.
Edit by Prasanth.K