பல இடங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்காததால் மக்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். பல இடங்களில் அத்தியாவசியமான பொருட்களுக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் மிகப்பெரும் கேஸ் சிலிண்டர் நிறுவனங்களான லிட்ரோ கேஸ் மற்றும் லாக்ஸ் கேஸ் ஆகிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.