டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த ஷேவாக்காக ரிஷப் பண்ட்?… சாதனைப் படைத்த அரைசதம்!

திங்கள், 14 மார்ச் 2022 (09:53 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நேற்று இலங்கைக்கு எதிரானப் போட்டியில் 28 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனைப் படைத்தார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் 28 பந்துகளில் அரைசதம் அடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இந்திய வீரர் ஒருவரின் அதிவேக சாதனை அரைசதம் ஆகும். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 30 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக 40 ஆண்டுகளாக இருந்து வந்தது. இப்போது அந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டை விறுவிறுப்பும் சுவார்ஸ்யமும் கொண்ட போட்டியாக மாற்றி அதிரடியாக விளையாடி ரசிகர்களை எண்டர்டெயின் செய்துவந்தார் சேவாக். இப்போது அவரின் ஸ்டைலை இளம் வீரர் ரிஷப் பண்ட் பின்பற்றி தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்