அரசு பணத்தில் 364 வயாகரா மாத்திரை வாங்கிய பெண் அதிபர்

வியாழன், 24 நவம்பர் 2016 (17:30 IST)
தென்கொரியா பெண் அதிபர் அரசு பணத்தில் 364 வயாகரா மத்திரைகள் வாங்கியதால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


 

 
தென்கொரியாவின் அதிபர் பார்க்குன் ஹெயின். பெர்ண் அதிபரான இவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவரது தோழியும், உதவியாளருமான சோய் சூன் அதிகாரங்களை பயன்படுத்தி பல தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் அதிபர் பதவி விலக வேண்டும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் அவருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். இந்நிலையில் அதிபர் அரசு பணத்தில் 364 வயாகரா மாத்திரைகள் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
 
இதற்கு அதிபர் மாளிகை சார்பில் விளக்க அளிக்கப்பட்டது. அதில் அவர்கள் கூறியதாவது:-
 
சமீபத்தில் அதிபர் ஆப்பரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். ஆப்பரிக்கா கடல் மட்டத்தை விட உயரத்தில் இருக்கும் நாடு என்பதால் அவருக்கு உடல்நிலை பாதிக்காமல் இருக்க வயாகரா மாத்திரைகள் வாங்கப்பட்டது. ஆனால் இந்த மாத்திரைகளை பயன்படுத்தவில்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்