தலைமறைவான தங்க பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்…. தகவல் கொடுத்தால் சன்மானம்!

செவ்வாய், 18 மே 2021 (08:49 IST)
இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் கொலை வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைப் பற்றி துப்புக்கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார். இவர் மீது இப்போது டெல்லி போலிஸார் கொலை வழக்கு பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மல்யுத்த வீரரான சாகர் தான்கட் என்பவரை சுஷில் குமாரும், அவரின் நண்பர்களும் தனியாக அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் படுகாயங்களுடன் அவரை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சாகரை அவரின் தோழர் சோனு என்பவர் காப்பாற்றி  மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து சாகரின் குடும்பத்தினர் சுஷில் குமார் மேல் புகார் கொடுக்க, கொலை வழக்கு அவர் மேல் பதிவு செய்யப்பட்டு லுக் அவுட் நோட்டீஸை போலிஸார் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இப்போது வரை சுஷில் குமார் தலைமறைவாக இருப்பதால் அவரைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும் என போலீஸார் அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்