டெல்லி முதல்வர் குற்றச்சாட்டுக்கு சிங்கப்பூர் அரசு மறுப்பு!

புதன், 19 மே 2021 (08:44 IST)
சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானங்களை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கூறியிருப்பதற்கு சிங்கப்பூர் அரசு மறுப்பு தெரிவித்துள்ளதுல்.
 
சீனா வைரஸ், பிரிட்டன் வைரஸ், இந்தியா வைரஸ் போல் சிங்கப்பூரில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த புதிய வகை வைரஸ் குழந்தைகளை தாக்கும் என்பதால் சிங்கப்பூர் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாட்டில் இருந்து வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். டெல்லி முதல்வரின் இந்த கருத்துக்கு சிங்கப்பூர் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் புதிய வகை வைரஸ் எதுவும் இல்லை என்றும் அவ்வாறு பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்