மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-69, சோலையம்மாள் தெருவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வு, அரசின் மக்கள் நலத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை உணர்த்துகிறது.