யோகாவும் எங்க நாட்லதான் பிறந்தது..! – மீண்டும் சர்ச்சை கிளப்பும் நேபாள பிரதமர்

செவ்வாய், 22 ஜூன் 2021 (12:45 IST)
யோகா கலை இந்தியாவிற்கு முன்னரே நேபாளத்தில் தோன்றி புழக்கத்தில் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் பல இடங்களில் பிரபலங்கள் பலர் யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்தியாவில் தோன்றிய யோகா கலை தற்போதைய கொரோனா காலத்தில் உலக மக்களுக்கு உதவிகரமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் யோகா கலை இந்தியாவில் பரவும் முன்னரே நேபாளத்தில்தான் தோன்றியது என அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என சர்மா ஒலி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்