வானில் தோன்றிய பிள்ளையார்: இலங்கையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (11:20 IST)
இலங்கையில், தமிழர் பகுதியான மட்டக்களப்பில் விநாயகர் உருவம் வானில் தோன்றியதாக பரபரப்பு ஏற்பட்டது.


 
 
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இலங்கை தமிழர் பகுதியான மட்டக்களப்பில் விநாயகர் வானில் தோன்றியதாக பரபரப்பு ஏற்பட்டது. வானில் மேக கூட்டங்கள் ஒன்று திரண்டு விநாயகர் போல் தெரிந்தது.
 
விநாயகர் சதுர்த்தி நாளில் இப்படியொரு காட்சி வானில் தெரிந்ததால் பக்தர்கள் பரபரப்பு அடைந்தனர். சாலையில் செல்வோர் வாகனத்தை நிறுத்தி விட்டு விநாயகர் உருவத்தை நோக்கி வணங்கினார்கள். சிலர் பூஜைகளும் செய்தனர். 
அடுத்த கட்டுரையில்