இரண்டாம் உலகப்போர் அணுகுண்டு: கிரேக்க நாட்டில் அதிர்ச்சி!!

ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (13:46 IST)
கிரேக்க நாட்டில் தெசா லோகினி என்ற இடத்தில் சாலைப் பணிகள் நடைபெற்றது. அப்போது பூமிக்குள் வெடிக்காத அணுகுண்டு புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


 
 
250 கிலோ வெடி மருந்து கொள்ளளவு கொண்ட அந்த அணுகுண்டு இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது. அப்போது வீசப்பட்ட குண்டு வெடிக்காமல் மண்ணுக்குள் புதைந்து இருப்பது தெரிய வந்தது.
 
அணுகுண்டை செயல் இழக்க செய்யும் நடவடிக்கையாக,  அணுகுண்டு புதைந்து கிடக்கும் 1.9 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
 
பொது மக்கள் வெளியேற்றம் பணியில் 1000 போலீஸ் அதிகாரிள் ஈடுபட்டுள்ளனர். எந்தவித அசம்பாவிதமின்றி அணுகுண்டை செயலிழக்க செய்ய கிரேக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்