குளிர் நிலையை நோக்கி சூரியன்: விளைவுகள் என்ன?

வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (20:01 IST)
சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் இன்னும் சில ஆண்டுகளில் சூரியனின் வெப்ப நிலை குறைய வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர். இது குறித்த விரிவான செய்திகள்....
கடந்த சில ஆண்டுகளாக, அதாவது 2015, 2016 மற்றும் 2017-ல் சூரியனின் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு வெப்பம் அதிக அளவில் உணரப்பட்டது. இதனால், பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் இன்னும் 30 ஆண்டுகளில் வெப்பம் கணிசமாக குறைந்து, கணக்கின் படி 2050 ஆம் ஆண்டு சூரியனின் வெப்பநிலை குறைந்து, ஒளி மங்கி காட்சியளிக்கும் என எச்சரித்துள்ளனர். 11 ஆண்டுகளாய் சூரியனின் சுழற்சியை கண்காணித்து வந்த கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
 
இவ்வாறு ஏற்பட்டால் பூமி மினி ஐஸ் ஏஜ் போல் காட்சியளிக்குமாம். இதற்கு முன்னர் 17 ஆம் நூற்றாண்டில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதாக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்