இந்திய பத்திரிக்கையாளர்கள் கொலை : சர்வதேச பத்திரிக்கை அமைப்பான பென் கண்டனம்...
திங்கள், 1 அக்டோபர் 2018 (18:52 IST)
சமீப காலமாக இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு சர்வதேச பத்திரிக்கையளர்கள் அமைப்பான ’பென்’ கடும் கண்டனம் கூறியுள்ளது.
ஏற்கனவே இதுபோன்று நடந்த சம்பவங்களுக்கு முறையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
அதில் இந்திய பத்திரிக்கையாளரும் சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ்,மற்றும் காஷ்மீர் பத்திரிக்கையாளரான சுஜாத் புகாரி ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டதற்காக பென் அமைப்பின் சார்பில் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.
அவர்கள் இருவரும் கொல்லப்பட்டதற்கான காரணம் பற்றி முறையாக விசாரிக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.