பாலைவனத்தில் 1000 கோடி மரக்கன்றுகள்: சவுதி அரேபியா புதிய முயற்சி!

செவ்வாய், 25 மே 2021 (18:25 IST)
பாலைவனத்தில் 1000 கோடி மரக்கன்றுகள்: சவுதி அரேபியா புதிய முயற்சி!
காலம் சென்ற நடிகர் விவேக் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் முயற்சிகளை எடுத்தார் என்பதும் ஆனால் அவர் இறக்கும் தருவாயில் சுமார் 33 லட்சம் மரக்கன்றுகள் மட்டுமே நட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சவுதி அரேபிய அரசு பாலைவனத்தில் ஆயிரம் கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சவுதி அரேபியா தற்போது பாலைவனமாக இருக்கும் நிலையில் அந்நாட்டை பசுமையாக மாற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் மாசுபடுதல் ஆகியவற்றை தடுக்கும் வகையில் பாலைவனத்தில் சுமார் 1000 கோடி மரக்கன்றுகளை நட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது
 
சவுதி பசுமை திட்டம் என்ற திட்டத்தின் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் இந்த மாற்றத்தை கொண்டுவர சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார் இந்த முயற்சி எந்த அளவுக்கு பயன் பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்