சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை; முதன்மை இஸ்லாமிய மதபோதகர்

ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (14:07 IST)
சவுதியில் பெண்களுக்கு அதரவாக இஸ்லாமிய மத ரீதியான கட்டுபாடுகள் தொடர்ந்து விலக்கப்பட்டு வருகிறது.

 
சவுதியில் இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாக பல விஷயங்கள் நடந்து வருகிறது. திரையரங்குகள் திறக்க திட்டமிட்டுள்ளனர். பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்க முடிவு செய்துள்ளனர்.
 
இந்நிலையில் தற்போது பெண்கள் பர்தா அணிவது அவசியமில்லை என்று முதன்மை இஸ்லாமிய மதபோதகர் ஷேக் அப்துல்லா அல் முட்லாக் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மத கொள்கை படி பெண்கள் பர்தா அணிவது வெகு நாட்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் சவுதியில் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணியவாதிகள் பலரும் இஸ்லாமிய பெண்கள் சுதந்திரத்துக்காக பல காலமாக போராடி வருகின்றனர்.
 
அவைகள் தற்போதுதான் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்