தொடரும் சவுதியின் விமானத் தாக்குதல்! – ஏமனில் 80 கைதிகள் பலி

ஞாயிறு, 23 ஜனவரி 2022 (08:44 IST)
சவுதி கூட்டுப்படைகள் ஏமனில் நடத்திய விமான தாக்குதலில் 80 கைதிகள் பலியாகியுள்ளனர்.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதியின் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அதிபர் மன்சூர் ஹாதியில் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகளும் செயல்பட்டு வருவதால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதியிலும் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சவுதி விமான நிலையம் மற்றும் பெட்ரோல் கிடங்கு மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதை தொடர்ந்து பதிலடி தரும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பதுங்கியுள்ள ஏமன் பகுதிகளில் சவுதி படைகள் விமானத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைவசம் இருந்த சிறைச்சாலை மீது அரபு விமானப்படை நடத்திய தாக்குதலில் 80 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 200 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்