உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் பல நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. கடந்த வாரம் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாகவும், அதை மனிதர்களிடம் சோதித்து வெற்றி கண்டுள்ளதாகவும் ரஷ்யாவின் கமலே இன்ஸ்டிட்யூட் தெரிவித்தது.
இந்நிலையில் முன்னதாக அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் சிலருக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கமலே மையத்தின் இயக்குனர் அலெக்ஸாண்டர் கின்ஸ்பெர்க் தடுப்பூசி அடுத்த மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கலாம் எனவும் கூறியுள்ளார்.