போலந்து மீது தவறுதலாக விழுந்த ரஷ்ய ஏவுகணைகள்: நேட்டோ நாடுகள் அவசர ஆலோசனை!

புதன், 16 நவம்பர் 2022 (11:54 IST)
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா வீசிய ஏவுகணை ஒன்று தவறுதலாக போலந்து நாட்டில் விழுந்ததாகவும் இதனையடுத்து அந்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இதனையடுத்து போலந்து நாட்டுடன் நேட்டோ நாடுகள் அவசர ஆலோசனை செய்து வருவதாக கூறப் படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது என்பதும், உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ரஷ்யாவின் இரண்டு ஏவுகணைகள் போலந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் தவறுதலாக விழுந்து போலந்து நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை வெளியுறவு அமைச்சர் உறுதி செய்துள்ளதை ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட நேட்டோ நாடுகளின் தலைவர்கள் போலந்து அதிபரை தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை செய்து வருவதாகவும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்