கெர்சன் நகரில் கொடியை ஏற்றிய உக்ரைன் ராணுவத்தினர்!

சனி, 12 நவம்பர் 2022 (21:26 IST)
உக்ரைன் நாட்டில் கெர்சன் நகரிலிருந்து ரஷ்ய ராணுவத்தினர் வெளியேறிய நிலையில்,  உக்ரைன் ராணுவத்தினர் அங்கு கொடியேற்றினர்.

உக்ரைன்  நாட்டின் மீது உலகப் பெரும் வல்லரசான ரஷியா தொடர்ந்து போரிட்டு வருகிறது. ஒன்பது மாதத்திற்கு மேலாக இப்போர் நடந்து வரும் நிலையில், சமீபத்தில், உக்ரைனில் சில பகுதிகளை தங்கள் பிராந்தியத்துடன் ரஷ்யா இணைத்துக்கொண்டது.

 
இந்த நிலையில், தங்கள் நாட்டின் 4 பகுதிகளை மீட்க உக்ரைன் போராடி வரும் நிலையில், சமீபத்தில் புதின் அப்பகுதிகளில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார்.

மேலும், ஆக்ரமிப்பு பகுதியான கெர்சனில் பொதுமக்களை வெளியேறும்படி அதிகாரிகள் கூறி வந்ததுடன், அப்பகுதியில், மின் சாரம், நீர்  உள்ளிட்ட அத்தியாவசி பொருட்கள்  துண்டிக்கப்பட்டன.

இதுகுறித்து, உக்ரைன் அரசு, மக்களின் வீட்டுகளில் புகுந்து பொருட்களைப் பறிப்பதாக ரஷியா மீது  குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், உக்ரைனின் கெர்சன் பகுதியில் இருந்து ராணுவத்தினரை வெளியேறும்படி ரஷிய அதிபர் உத்தரவிட்டார். எனவே ரஷிய படைகள் கெர்சன் நகரில் இருந்து வெளியேறினர்.

இந்த நிலையில், தற்போது கெர்சன் நகர் உக்ரைன் ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால், உக்ரைன் கொடியை ஏற்றினர், இதற்கு பொதுமக்கள் ஆதரவு கோஷம் எழுப்பினர்.

இதனால், கெர்சன் நகர் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதே சமயம் ஒவ்வொரு வீடாகச் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்