உக்ரைனில் திணறி வரும் ரஷிய படைகள் - இங்கிலாந்து உளவுத்துறை!

வெள்ளி, 18 மார்ச் 2022 (11:26 IST)
உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் திணறி வருவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 25 நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலால் இரு தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.
 
உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. ஆனால் பெரிய நகரங்கள் எதையும் இதுவரை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை. உக்ரைனின் முக்கிய பகுதிகளான கிவ், கார்கிவ் பகுதிகளில் ரஷ்யா குண்டுமழை பொழிந்து வந்தாலும் தலைநகர் கிவ்வையும், 2-வது பெரிய நகரமான கார்கிவையும் பிடிப்பதில் ரஷிய ராணுவம் திணறி வருகிறது.
 
ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சவால் அளித்து வருகிறார்கள். இந்தநிலையில் உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் திணறி வருவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவலை உக்ரைன் ராணுவம் உறுதி செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்