புச்சா படுகொலை... ரஷ்யா திட்டவட்டமாக மறுப்பு!

புதன், 6 ஏப்ரல் 2022 (10:25 IST)
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த இடத்திலும் கொடுமைகள், கொலைகள் நடக்கவில்லை என உக்ரைன் குற்றசாட்டுக்கு ரஷ்யா பதிலடி. 

 
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 40 நாட்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவமும் ரஷ்ய வீரர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
 
இதனைத்தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்-க்கு அருகே உள்ள புக்கா என்ற நகரத்தில் சாலையில் நூற்றுக்கணக்கான உடல்கள் சிதறிக்கிடந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புச்சா நகரிலுள்ள ஒரு தெருவில் கைகள் கட்டப்பட்ட நிலையில் 20 ஆண்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. 400 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு உலகம் முழுவதுமாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது ஒரு இனப்படுகொலை என்றும் இதை செய்தது ரஷ்யா தான் எனவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றஞ்சாட்டினார். ஆனால் உக்ரைனின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது ரஷ்யா. மேலும் இது குறித்து ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
உக்ரைனில் அட்டூழியம் என்ற செய்தி கட்டுக்கதை மட்டுமே. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த இடத்திலும் கொடுமைகள், கொலைகள் நடக்கவில்லை. இது கோபத்தை ஏற்படுத்தும் செய்தி மட்டுமே. புச்சா ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் ஒரு உள்ளூர் நபர் கூட எந்த வன்முறை நடவடிக்கையால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்