கச்சா எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா?

ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (10:38 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளதால் இந்தியா உள்பட உலக நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது . 
 
அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினமும் 5 லட்சம் பேரல்கள் குறைக்கப்படும் என ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது.ரஷ்யாவின் இந்த அதிரடி அறிவிப்பு காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்படும் என்றும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு ஒரு பேரல் 60 டாலர் என  மேற்கத்திய நாடுகள் விலை நிர்ணயம் செய்ததால் ரஷ்யா இந்த பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்