இன்று பெட்ரோல் விலையில் திடீர் மாற்றமா? சென்னை விலை நிலவரம்..!

புதன், 8 பிப்ரவரி 2023 (07:46 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 262 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் இன்று 263 வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்