உக்ரைன் விமான தளத்தை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்!

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (19:44 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் கடுமையாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது உக்ரைனில் உள்ள விமான தளத்தை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் தலை நகருக்கு அருகே உள்ள ஹாஸ்டொமெல் என்ற விமான தளத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
கீவ் நகரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த விமான தளத்தில் ரஷ்யாவின் பாராசூட் படை இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யராணுவம் மீது நடத்திய தாக்குதலில் 1000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்