உக்ரைன் - ரஷ்யா போர் நிலவரம் குறித்து கேட்டறிந்த போப்!

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:04 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போர் நிலவரம் குறித்து போப்பாண்டவர் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய ராணுவ படைகளுக்கு நேற்று அதிபர் புதின் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று உக்ரைன் நாட்டிற்குள் புகுந்து கொடூரமான தாக்குதல் நடத்தியது.
 
இந்த போரில் நூற்றுக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யாவுக்கும் சில பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் உக்ரைன் போர் விவகாரத்தில் வாடிகனில் உள்ள ரஷ்ய தூதரை அழைத்து போர் தாக்கம் குறித்து போப் ஆண்டவர் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் போரை நிறுத்த வேண்டும் என்று போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்