துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிசெப் தயிப் எர்துவான் புதிய நிர்வாக அதிகாரங்களை தன் கையிலெடுத்துக்கொள்ள உள்ளார். இதனால், பிரதமர் பதவி ஒழிக்கப்படுவதுடன், நாடாளுமன்றத்தின் அதிகாரமும் பலவீனமாகும்.
துருக்கியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு கருத்து வாக்கெடுப்பில் பிரதமர் பதவியை ஒழிப்பதற்கும், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கிடைத்தது. இந்த ஒப்புதல் இப்போது செயல்படத் தொடங்கும்.
மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு வழங்கிய தமது உரையில், வெகு விரைவில் புதிய அதிபர் ஆட்சி முறையை கொண்டுவருவதாக உறுதியளித்தார் எர்துவான்.