கமல் கட்சிக்கு அங்கீகாரம்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

வெள்ளி, 22 ஜூன் 2018 (19:23 IST)
நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை மதுரையில் ஆரம்பித்தார். அதன் பின்னர் சென்னை, கோவை நகரங்களில் மாநாடு, அரசியல் பிரமுகர்கள் சந்திப்பு என பிசியாக உள்ளார்.
 
இந்த நிலையில் கமல் தனது கட்சிக்கு அங்கீகாரம் வேண்டி தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்திருந்தார். இதனையடுத்து கமல் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு செய்தது. ஆனால் கமல் கட்சிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால் சமீபத்தில் கமல்ஹாசனை டெல்லி வருமாறு தலைமை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டது.
 
இதனையடுத்து கமல்ஹாசன் டெல்லி சென்று தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்தார். இதனால் கமல் கட்சிக்கு ஓரிரு நாட்களில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் தேர்தல் ஆணையம் கமல் கட்சியை பதிவு செய்து அங்கீகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கமல் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதால் அந்த கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்