ரூ. 10 ஆயிரம் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்ட செல்ல நாய்...

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (17:03 IST)
நான் எத்தனை ஆசையாய் செல்லப் பிராணிகளை வளர்த்தாலும் கூட சில வேளைகளில் அவை நமக்கு சில சேதாரங்களை விளைவிக்கும்.

இந்நிலையில்,  ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த  நாய் ஒன்று ரூ.100 டாலர் பணத்தை ( ரூ.9800) எடுத்துச் சாப்பிட்டுள்ளது.

ஐல் ஆஃப் மேன் என்ற நாட்டில் வசித்து வருபவர் ஜோஸலின் ஹார்ன். இவர் தன் வீட்டில் படுக்கை அருகே ஒருபாவை வைத்து அதில் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் செல்லமாக வளர்த்து வந்த பெக்கி சமீபத்தில் அந்தப் பணத்தை எடுத்துச் சாப்பிட்டது.

ஜோஸலின் பணி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பானையில் ஒரு பணத்தாளும் இல்லை. கீழே பணத்தாள்கள் கிழிந்து கடந்துள்ளது.

பின்னர், நாய்க்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அப்பணத்தை மறுநாள் அது கக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதைக் கழுவி அதன் வரிசை எண்கள் தெரிந்தால் பணத்தைப் பெறலாம் என்பதால் அதற்கு முயன்றுள்ளார். ஆனால் பணத்தில் அதைக் காணமுடியவில்லை. அதனால் ஏமாற்றம் அடைந்தார்.

ஆனால் பாசமாக நாய் மீது அவர் கோபப்பட வில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்