தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு விதித்த தடை தொடரும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வீடியோவில், இத்தனைப் பேரை பலிகொண்ட ஸ்டெர்லைட் மீண்டும் ஆலையை திறக்கக் கூடாது. இதுக்கும் மேல ஆலையை திறக்கனும்னு நினைத்தால் அவங்கள மனுஷங்களே கிடையாது. மக்கள் சக்தி ஜனசக்தி ஜெயிக்கும் என தெரிவித்தார்.