கொரோனா பரவ காரணமே இந்த விலங்குதான்! – நிபுணர்கள் குழு அதிர்ச்சி தகவல்!

வெள்ளி, 17 மார்ச் 2023 (10:28 IST)
உலகம் முழுவதும் கொரோனா கடந்த சில ஆண்டுகளாக நீடித்துள்ள நிலையில் அதற்கு காரணமான விலங்கு குறித்து சர்வதேச நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து கடந்த 2019 இறுதி வாக்கில் திடீரென பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. உலகம் முழுவதும் 2020ம் ஆண்டில் கொரோனா காரணமாக முடங்கிய நிலையில் மக்களும் ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகினர். பெரும் முயற்சிகளுக்கு பிறகு மெல்ல கொரோனா குறைந்த நிலையில் தற்போதும் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து நிபுணர்கள் குழு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.



முன்னதாக அமெரிக்க நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தியபோது வூகான் விலங்குகள் சந்தையிலிரிந்து கொரோனா பரவியிருக்கலாம் என்ற கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டது. தற்போது சர்வதேச நிபுணர்கள் குழு நடத்திய ஆய்வில் சீனாவின் வூகான் சந்தையில் உள்ள ரக்கூன் நாய் வகையிலிருந்து கொரோனா தொற்று தொடங்கியதற்கான மரபணு சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் சந்தையில் ரக்கூன் நாய்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், அந்நாய்களிடமிருந்து இந்த தொற்று பரவியிருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்