இந்தியாவில் உணவு பஞ்சம் உருவாக வாய்ப்பு : ஐநா எச்சரிக்கை

புதன், 27 பிப்ரவரி 2019 (11:19 IST)
மனிதன் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் மிகவேகமாக வளர்சி அடைந்து இப்போது தகவல் தொழில்நுட்பத்தில் கொடி கட்டி பறக்கிறது. ஆனால் மனிதன் இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்டான். அதனால் தற்போது காடுகள், காட்டுவாழ் பல்லுயிரினங்கள் எல்லாம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருகின்றன. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் உணவு ஒஅஞ்சத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் ஐநா சபையின் உணவு மற்றும் விவசாயிகள் பிரிவு அண்மையில் நடத்திய ஒரு ஆய்வில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ரோம் நகரில் வெளியிட்டனர்.
 
இந்த ஆய்வு 91 நாடுகளில் நடத்தப்பட்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களும் கூட இந்த உனவு பஞ்சத்தால் பாதிக்கப்படலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது,இதில் முக்கியமாக உலகில் பல்லுயிர்களின் அழிவே முக்கிய காரணம் என்றும், பருவநிலை மாறுபாடும் முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்