அந்த வகையில் ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை பெற முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவராகிய ஜிவி பிரகாஷூக்கு புதுச்சேரியில் உள்ள சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை பிப்ரவரி 17ஆம் தேதி வழங்கி கெளரவித்துள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு நெட்டிசன்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.