இந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதால் இந்தியா பாகிஸ்தனை தனிமைப்படுத்துவம், அந்நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்தவும் காத்துக்கொண்டிருக்கிறது. அதோடு, பாகிஸ்தன மீது வணிகப்போரை துவங்கிவிட்டது.
இந்நிலையில், காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் நோக்கில், பாகிஸ்தானில் உள்ள இளம் பெண்கள் சமூக ஊடக பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பெண் பத்திரிகையாளர் செஹிர் மிர்ஸா #AntiHateChallenge எனும் இந்த பிரசாரத்தை துவங்கியுள்ளார். நான் ஒரு பாகிஸ்தானி. நான் புல்வாமா தாக்குதலைக் கண்டிக்கிறேன், எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை கையில் ஏந்தி ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதோடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று #AntiHateChallenge, #NotoWar, #WeStandWithIndia, #CondemnPulwamaAttack உள்ளிட்ட ஹேஸ்டேகுகளை பதிவிட்டு இந்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.